முதற்பக்கம் பிரிவுகள் செயல்வலுப்படுத்தும் பிரிவு
செயல்வலுப்படுத்தும் பிரிவு

தொழில் திணைக்களத்துடன் தொடர்புடைய சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இப் பிரிவின் பிரதான பணியாகும். இப் பிரிவின் அலுவலர்களால் தொழில்கொள்வோர் தொழில் சட்டத்திட்டங்களை மீறுகின்ற சம்பவங்கள் பற்றி கற்கையிடப்படுகிறது.   அதன் படி தேவையான சட்டத்துடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட உதவி ஆணையாளர்களுக்கும் ஏனைய பிரிவுத் தலைவர்களுக்கும் தேவையான தகவல்கள் வழங்குவதும் இப் பிரிவின் பணியாகும்.

தொழில் ஆணையாளர் நாயகத்தின் பொருட்டு வழக்குகளுக்குத் தோன்றுதலும் சம்பவங்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளுக்கு குற்றப்பத்திரங்களை கோவையிடுதலும் சத்தியக்கடுதாசிகளை தயாரித்தலும் இப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத்தொடரும் போது சட்டமா அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குதலும் தொழில் ஆணையாளர் நாயகத்தின் பொருட்டு தோன்றுதலும் இப் பிரிவின் பணிகளாகும்.

இதற்கு மேலதிகமாக தொழில் திணைக்களத்தின் மூலம் சட்டத்துடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் இப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.

பதவி தொ. பே இல  .
சிரேஷ்ட சட்ட ஆலோசகர்
+94 112586980
பிரதி தொழில் ஆணையாளர்
+94 112501254
உதவித் தொழில் ஆணையாளர்
+94 112504209
புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022 06:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது