பின்னணி

1923 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க  இந்திய குடியேறியவர்களின் பொருட்டு தொழில் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழில் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டதுடன்  இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் நலன்புரி வசதிகளை  மேற்கொள்ளுதல் இத் திணைக்களத்தின் பிரதான நோக்கமாக இருக்கிறது

எவ்வாறாயினும்‚ உள்நாட்டு ஊழியப் படையானது படிப்படியாக வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து‚ அவர்களின் நலன்புரி வசதிகள் மற்றும் முன்னேற்றம் என்பவற்றைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் தொழில் கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட தொழில் கட்டுப்பாட்டாளர் என்ற பதவிப் பெயர் பிற் காலத்தில் தொழில் ஆணையாளர் என மாற்றம் செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் அதிக அதிகாரங்களுடன் அப்பதவி தொழில் ஆணையாளர் நாயகம் என திருத்தம் செய்யப்பட்டது. நியதிச்சட்டசபையால் கடந்த என்பத்தேழு (94) ஆண்டுக் காலப்பகுதியினுள் 50 இற்கும் அதிகமான அடிப்படை சட்டத்திட்டங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி விதிக்கப்பட்டது. குறித்த சட்டத்திட்டங்கள் அமுல்படுத்தல் தொழில் திணைக்களத்தின் பிரதான கடமைப்பொறுப்பாகும். இப் பணியின் பொருட்டு திணைக்களத்தின் கீழ்  பிரதான 13 பிரிவுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இதற்கு மேலதிகமாக 11 பிராந்திய அலுவலகங்களும், 40 மாவட்ட தொழில் அலுவலகங்களும், 17 உப தொழில் அலுவலகங்களும், 10 மாவட்ட தொழிற்சாலைகள் மற்றும் பொறியியலாளர் அலுவலகங்களும் இயங்குகின்றன.

நோக்கு

சர்வதேச போட்டித் தன்மையான பொருளாதாரத்திற்கான நிரந்தர கைத்தொழில் சமாதானமுடைய ஒரு நாடு.

செயற்பணி

நிலைத்ததொரு கைத்தொழிற் சமாதானத்துடன், ஒரு சீரிய வேலைச் சூழலை உருவாக்குவதனூடக இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாட்டுக்குப் பங்களித்தல்.

செயற்பாடுகள்
திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பிரதான விடயங்கள் பின்வருமாறு.

  • தொழில் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தல்‚ தொழில் பிணக்குகளைத்தீர்த்தல்
  • சமூக பாதுகாப்புத் திட்டங்களை நடை முறைப் படுத்தல்.
  • தொழில் துறையுடன் தொடர்புடைய மீளாய்வுகளை நடாத்தல், தேவையான திட்டங்களைத் தயாரித்தல்,  தொழில் விடயம் தொடர்பான அறிவுறுத்தும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை உள்ளக மற்றும் வெளியக ரீதியாக நடாத்தல்.
  • பங்குதாரர்களிடையே சமூக உரையாடல்களை விருத்திச்செய்தல்.
  • தொழில் துறையுடன் தொடர்புடைய புள்ளி விபரங்களைத் திரட்டுதல்‚ பகுப்பாய்வு செய்தல் மற்றும் சமர்ப்பித்தல்.
  • சர்வதேச தொழில் அமைப்பின் இலங்கைப் பிரதி நிதியான, தொழில் உறவுகள் அமைச்சுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  •  தொழிற் சங்கங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.