முதற்பக்கம் பிரிவுகள்
Divisions
செயல்வலுப்படுத்தும் பிரிவு

தொழில் திணைக்களத்துடன் தொடர்புடைய சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இப் பிரிவின் பிரதான பணியாகும். இப் பிரிவின் அலுவலர்களால் தொழில்கொள்வோர் தொழில் சட்டத்திட்டங்களை மீறுகின்ற சம்பவங்கள் பற்றி கற்கையிடப்படுகிறது.   அதன் படி தேவையான சட்டத்துடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட உதவி ஆணையாளர்களுக்கும் ஏனைய பிரிவுத் தலைவர்களுக்கும் தேவையான தகவல்கள் வழங்குவதும் இப் பிரிவின் பணியாகும்.

தொழில் ஆணையாளர் நாயகத்தின் பொருட்டு வழக்குகளுக்குத் தோன்றுதலும் சம்பவங்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளுக்கு குற்றப்பத்திரங்களை கோவையிடுதலும் சத்தியக்கடுதாசிகளை தயாரித்தலும் இப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், ஆகிய நீதிமன்றங்களில் வழக்குத்தொடரும் போது சட்டமா அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குதலும் தொழில் ஆணையாளர் நாயகத்தின் பொருட்டு தோன்றுதலும் இப் பிரிவின் பணிகளாகும்.

இதற்கு மேலதிகமாக தொழில் திணைக்களத்தின் மூலம் சட்டத்துடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் இப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.

பதவி தொ. பே இல  .
சிரேஷ்ட சட்ட ஆலோசகர்
+94 112586980
பிரதி தொழில் ஆணையாளர்
+94 112501254
உதவித் தொழில் ஆணையாளர்
+94 112504209
புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022 06:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ஊழிய தரப் பிரிவு

இந்தப் பிரிவின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சட்டஏற்பாடுகள்

 1. 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்.

 2. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும்அலுவலகச் (சேவை ஒழுங்கு விதிகள் மற்றும் கொடுப்பனவுகள்) சட்டமும் அதன் திருத்தங்களும்.
 3. 2005 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, வரவு செலவு திட்ட நிவாரணப் படிச்சட்டம்

தொழில் தரப் பிரிவால் வழங்கப்படும் சேவைகள்

 1. தனியார் துறைத் தொழிலாளாகளின் ஆகக்குறைந்த சம்பளங்களையும், சேவை நிபந்தனைகளையும் தீர்மானித்தல்.
 2. சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம், கடைகள் மற்றும் அலுவலகச் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆகக் குறைந்த வேலை நேரம், மேலதிக கொடுப்பனவுகள் ஆகியவற்றை தீர்மானித்தலும், அவற்றுக்குரிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தலும்.
 3. தொழிலாளர் தொழில் கொள்வோர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமையவும், தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு அமையவும் ஒவ்வொரு தொழிலுக்குமான புதிய சம்பளச் சபையை அமைத்தல்.
 4. சம்மளத்திலிருந்தான சட்டபூர்வமான கழிவுகள் பற்றி தொழிலாளர்கள்  தொழில் கொள்வோர் ஆகியோரி்டையே விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
 5. வாழ்க்கைச் செலவுச் சுட்டியின் படி,  கொக்கோ, கறுவா தொழில்களுக்கான ஆகக்குறைந்த நாட்சம்பளத்தை கணித்தலும் அதனை மாதாந்தம் பிரசுரித்தலும்
வெள்ளிக்கிழமை, 08 ஜூன் 2018 05:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ஊழியர் சேமலாப நிதியம்

NO TRANSLATIONS AVAILABLE

புதன்கிழமை, 25 ஜூலை 2018 04:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தொழிற் சங்கக் கிளை

அறிமுகம்

தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் ”தொழிற் சங்கப் பதிவாளரு”க்குரிய கடமைகளையும் தொழிற்பாடுகளையும் மேற்கொள்ளும் நோக்கத்திற்காக இக்கிளை நிறுவப்பட்டுள்ளது்.

தொழிற்சங்க செயற்பாடுகள்

 • புதிய தொழிற்சங்கங்களை பதிவு செய்தல்
 • பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் தொடர்பாக இற்றைப் படுத்தல்
 • தொழிற் சங்கங்களைக் கலைத்தல்.
 •  தொழிற் சங்கங்களை இரத்துச் செய்தல்.
 • தொழிற் சங்கங்களை ஒன்றிணைத்தல்.
 • தொழிற்சங்கங்கள் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் வழங்கல்.

பொது மக்களுக்கான சேவை

 • புதிய தொழிற்சங்கங்கப் பதிவுக்கான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.
 •  தொழிற்சங்கங்க நடவடிக்கைகளுக்கான தொழிற்சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.
 • சூழ்நிலைக்கேற்ப, தொழிற்சங்கத்தின் உத்தியோகத்தவர் மற்றும் உறுப்பினருக்கான வழிகாட்டல்களை வழங்குதல்.
 • வேண்டுகோளுக்குகேற்ப தொழிற்சங்கங்கள் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் வழங்குதல்.

படிவங்களும் விண்ணப்பங்களும்

 

படிவம்

விண்ணப்பம்

1) "B" - (Labor - C.3 )

தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம்.

2) "G" - (Labor - C.35 )

பெயரை மாற்றுவதற்கான அறிவித்தல்.

3) "H" - (Labor - C.36 )

தொழிற்சங்கங்களை ஒன்றிணைப்பதற்கான அறிவித்தல்

4) "I" - (Labor - C.37 )

கலைப்பதற்கான அறிவித்தல்.

5) "J" - (Labor - C.38 )

அலுவலக மாற்றத்திற்கான அறிவிமத்தல்

6) "K" - (Labor - C.39 )

.

7) "L" - (Labor - C.40 )

உத்தியோகத்தவர்களின் மாற்றம் பற்றிய அறிவித்தல்.

8) "N" - (Labor - C.41 )

வருடாந்த அறிக்கைகள்.

 

This Access to the Information over telephone:- Assistant commissioner of labor - +94112369646

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017 06:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தொழில் உறவுகள் பிரிவு

மிகச் சிறந்த தொழில் வழங்குநர்‚ தொழிலாளர் உறவின் மூலம் தொழில்துறை ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்லல் தொழில் உறவுகள் பிரிவின் பிரதான பணியாகும். தொழில் பிணக்குகள் ஏற்படும் போது அவற்றை தவிர்த்துக் கொள்வதற்கு தலையிடுவதுடன் இதன் மூலம் நாட்டின் சிறந்த தொழில் உறவுகள் முறை ஏற்படுவதனை எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த பணிகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு இப் பிரிவால் பின் குறிப்பிடப்படும் சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


 1. தொழில் பிணக்குகள் சட்டம்
 2. தொழில் முடிவுறுத்தும் சட்டம்
 3. தொழிற்சங்க கட்டளைச்சட்டம்
 4. பணிக்கொடை செலுத்தும் சட்டம்மேற்படி சட்டதிட்டங்களை உரிய வாறு நடைமுறைப்படுத்துவதற்காக இப் பிரிவு பல்வேறு பிரிவுகளைக் கொண்டு இயங்குகின்றது.


1.    தொழில் உறவுகள் பிரிவு
2.    தொழில் முடிவுறுத்தும் அலகு
3.    தொழிற்சங்கப்பிரிவு
4.    சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தள கூட்டுறவுப் பிரிவு

ஒரு நாட்டில் தொழில் பிணக்குகள் ஏற்பட்டவுடன் சகல தரப்புகளும் இணைந்து அதற்கான உடனடி திர்வு காணல் வேண்டும். அதன் மூலம் தொழில் கொள்வோர்‚ தொழில் புரிவோர் ஆகிய இரு தரப்புகளிடையே சிறந்த உறவை பேணிச்செல்லலாம்.  நாட்டில் வேலை நிறுத்தம் மற்றும் தொழில் பிணக்குகள் ஆகியவற்றை தீர்ப்பதன் ஊடாக ஊழியர்கள் நலன் அடையலாம்.


 1. தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 4(1) தொடக்கம் ஏற்புடையதாகும்.
 2. தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 12(1) தொடக்கம் ஏற்புடையதாகும்.
 3. தொழில் உறவுகள் பிரிவால் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு ஏற்புடையதான அறிக்கைகள் மற்றும் சாட்சி சாராம்சங்கள்
 4. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தில் கூட்டு உடன்படிக்கைகளை முடிவுறுத்தும் அறிவித்தல்
 5. தீர்பாளர் மூலம் தீர்வுக்கு வருதல்/தொழிந்   நீதிமன்றம்.
 6. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமான கைத்தொழில்களை சேவையிலிருந்து நீக்குவதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு
 7. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமான தொழில்களில் வேலை நிறுத்தம் செய்வதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டி அறிவிப்பு
 8. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம்  பிரிவு 31(B)  இன் கீழ் செய்யப்படும் கோரிக்கை
 9. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம்  பிரிவு 10(9) இன் கீழ் தொழில் நீதிமன்றத்திடம் செய்கின்ற மேன்முறையீடு
 10. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ்  கொழும்பு  தொழில் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு
 11. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம்  தீர்ப்பாளர்/தொழில் நியாய சபைகள் 
 12. 1950 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் - சாட்சி அழைப்பு
 13. தொழில் பிணக்குகள் சட்டத்தின் அத்தியாயம் 131   பிரிவு 43( அ) 1 இன் கீழ் அறிவிப்பு.


தொழில் உறவுகள் பிரிவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

பதவி தொ. பே இல
தொழில் ஆணையாளர் (தொழில் உறவுகள்) 
+94112582608
பிரதி தொழில் ஆணையாளர்
+94112368502
உதவி தொழில் ஆணையாளர் +94112369484வெள்ளிக்கிழமை, 08 ஜூன் 2018 05:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
<< தொடக்கம் < முன் 1 2 3 அடுத்தது > முடிவு >>

பக்கம் 3 - மொத்தம் 3 இல்