முதற்பக்கம் பிரிவுகள் தொழில் புள்ளி விபரப்பிரிவு

தொழில் புள்ளிவிபரப் பிரிவு

நாட்டின் முறையாக ஒழுங்கமைந்துள்ள தொழிற்றுறை தொடர்பான புள்ளிவிபரங்களைத் திரட்டும் பணியை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துதல் தொழில் திணைக்களப் புள்ளிவிபரப் பிரிவின் கடமையாகும்.

புள்ளிவிபரப் பிரிவின் பிரதான பணிகள்
தொழில்கள், சம்பளங்கள், வேலை செய்யும் மணித்தியாலங்கள் போன்றவை தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொகுத்தல் ஆகியவற்றிற்கு தொழில் திணைக்களத்தின் புள்ளிவிபரப் பிரிவு பொறுப்பாகும் என்பதுடன் நிருவாகப் பதிவுகளை பட்டியல்படுத்துதல் மற்றும் சம்பள விகிதச் சுட்டிகளை கணிப்பது போன்றவற்றில் இந்தப் பிரிவானது கவனம் செலுத்துகிறது. இந்தத் தகவல்களானவை வருடாந்த மற்றும் வருடம் இரு முறை நடாத்தப்படுகின்ற இரண்டு முக்கிய அளவீடுகள் மூலம் திரட்டப்படுகின்றன.


(1)    இப்பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அளவீடுகள்

  • இலங்கையில் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வருடாந்த அளவீடு
  • உண்மையாக வேலையிலிருந்த மணித்தியாலங்கள் மற்றும் சராசரி சம்பாத்தியம் தொடர்பான ஆய்வு


(2)    ஏனைய முக்கிய நடவடிக்கைகள்

  • பொருளாதாரத்தின் பிரதான துறைகளுக்கான சுட்டெண்களைக் கணித்தல்
  • சம்பளச் சபைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் நிருணயிக்கப்படுகின்ற குறைந்தபட்ச சம்பளங்களை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச சம்பள விகிதச் சுட்டிகளை கணித்தல்
  • வருடாந்த புள்ளிவிபர அறிக்கைகளைத் தயாரித்தலும் வெளியிடலும்
    • இலங்கையில் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வருடாந்த அளவீட்டு அறிக்கை
    • உண்மையாக வேலையிலிருந்த மணித்தியாலங்கள் மற்றும் சராசரி சம்பாத்தியம் தொடர்பான ஆய்வு அறிக்கை
    • இலங்கையின் தொழில் புள்ளிவிபரங்கள்
  • வழக்கமாக தரவுகள் வெளியிடப்படுவது
    • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம்
    • இலங்கை மத்திய வங்கி


(3)    ஏனைய கடமைகள்

  • அளவீடுகளை  நடாத்துவதற்கும், தொழில் புள்ளிவிபரங்களைத் தொகுத்தல் மற்றும் வெளியீடு செய்தல் ஆகிய நடவடிக்கைளை மேற்கொள்ளுவதற்காக அமைச்சு மற்றும் திணைக்களம் என்பவற்றிற்கு உதவுதல்
  • இந் நாட்டின் சகல உதவித் தொழில் ஆணையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி ஊ.சே.நி செலுத்தத் தயாராக உள்ள நிறுவனங்களின் புதிய பதிவுத் தகவல்களைப் பேணுதல்  

 

பொதுமக்களுக்கான சேவைகள்

தொழில் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள் கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும்

 

தொடர்பு விபரங்கள்
பிரதிப் பணிப்பாளர்: (+94)112676114
தொலைநகல்: (+94)112676114
புள்ளிவிபரவியலாளர் : (+94)112676113
புள்ளிவிபர உத்தியோகத்தர் : (+94)112676112
மின்னஞ்சல் : labourst@sltnet.lk

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2023 06:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது