முதற்பக்கம் பிரிவுகள் திட்டமிடல், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் வெளியீடுகள் பிரிவு

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சி அளித்தல் மற்றும் வெளியீட்டுப் பிரிவு

செயற்பணி

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சி அளித்தல் மற்றும் வெளியீட்டுப் பிரிவின் செயற்பணியானது திணைக்களத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் பொருட்டு திறமையுள்ள அலுவலர்களை உருவாக்குவது மற்றும் கைத்தொழில் அமைதியை நலைநாட்டுவதன் பொருட்டு திட்டங்களைத் தயாரித்தல், கொள்கைகளை உருவாக்குவதில் உதவுதல், தரவுகளைச் சேகரித்தல், ஆராய்ச்சிகளை நடாத்துதல் மற்றும் நீண்டகால இடைக்காலத் திட்டங்கள் மற்றும் வருடாந்தத் திட்டங்களை தயாரித்தல்.

 

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சி அளித்தல் பிரிவு

திணைக்களத்தின் வருடாந்த செயற்பாடுகள் தொடர்பான முறையான வழிகாட்டுதலை வழங்குவதற்கு செயற்திறன் கொண்ட திட்டங்களைத் தயாரித்தல் இந்தப் பிரிவினூடாக செயற்படுப்ப்ப்படுகின்றது. அத்துடன் மேற்படி நடவடிக்கைகளின் யாலாண்டு முன்னேற்றங்களைத் தொடர்ந்து செய்வதற்கு திணைக்களத்தின் பல்வேறுப்பட்ட பிரிவுகளினால் சாத்தியமாகின்றது.

நாடுபூராகவுமுள்ள தொழில் அலுவலர்களின் மாதாந்த நாளேடுகளினதும் தொழில் பரிசதைனைகளினதும் தரத்தினைப் பரிசோதனை செய்தல் அத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுதல்களை வழங்குதல்.

 

பயிற்சி வேலைத்திட்டம்

இந்தப் பிரிவினால் திணைக்களத்தின் சகல பயிற்சி நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படுகின்றன. பிரதானமாகப் பின்வரும் வகையில் பயிற்சிகள் வகைப்படுக்கப்படுகின்றன.

 • திணைக்களத்திற்குச் சேர்க்கப்பட்டுள்ள பயிலுனர் அலுவலர்களுக்கான சேவையிலிருக்கும் போதான பயிற்சித்திட்டங்கள்
 • தொழில் பரிசோதனைகள் தொடர்பான பயிற்சிகள்.
 • தொழிலாளர்கள் தொடர்பான நடவடிக்கைக்கான பயிற்சிகள்.
 • முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பயிற்சிகள்.
 • திணைக்களத்தின் பொறியியலாளர்களுக்கான பயிற்சிகள்.
 • சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களுக்கான பயிற்சிகள்.
 • சிலிடா (SLIDA) மற்றும் ஏனைய  விவாரி நிறுவனங்களினால் நடாத்தப்படும் பயிற்சிகளுக்கு அலுவலர்களை அனுப்பி வைத்தல்.
 • திணைக்களத்திலுள்ள சகல அலுவலர்களுக்குமான கணனிப் பயிற்சிகள் (இந்தப் பிரிவானது 25 கணனிகளுடனான ஒரு ஆய்வுகூடத்தினை உள்ளடக்கியதாகவுள்ளது)

 

வெளியீடுகள்

திட்டமிடுதல், ஆராய்ச்சி, பயிற்சிப் பிரிவினால் திணைக்களத்திற்காக பின்வரும் சட்டங்களும், கட்டளைச் சட்டங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

 • 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம்
 • 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர்கள் சேமலாப நிதிச் சட்டம்
 • 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை, காரியாலயச் சட்டம்
 • 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம்
 • 1​939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம்
 • 1983ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டம்
 • 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிற்லைகள் கட்டளைச் சட்டம்
 • 1​971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டம்

நற்பயனளிக்க கூடியதும் மற்றும் சரி நிலையான வெளியிடுகைக்குமான புதிய தொழில்நுட்பத்தினைப் பாவிப்பதன் மூலம் தொழிற்பரிசோதனைகளைப் பலப்படுத்துவதற்கு சர்வதேச தொழில் நிறவனத்தினால் நிதி உதவியளிக்கப்பட்டதும், நடைமுறைப்படுத்தப்படுவதுமான லீசா (LISA) என அழைக்கப்படுவதும், கணனிமயப்படுத்தப்பட்டதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் இப்பிரிவினால் நடாத்தப்படுகின்றது.

பயிற்சி அளித்தல் வசதிகளும், கருத்தரங்குளகளுக்குப் பொருத்தமானதும், ஒன்றிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளை நடாத்துவதற்குமான முழு வசதிகளுடன் கூடிய “ சீதாவக்கை மனுதவள அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையம்” இப்பிரிவினால் நடாத்திச் செல்லப்படுகின்றது.

 

ஆணையாளர்

திட்டமிடுதல் ஆராய்ச்சி பயிற்சி மற்றும் வெளியீட்டுப் பிரிவு

06வது மாடி, தொழிற் திணைக்களம்,

நாரஹென்பிட்டிய,

கொழும்பு 05

                                   

பிரிவு: +94112582647

LISA பிரிவு: +94112582954

தொலைநகல்: +94112504208

மின்னஞ்சல்: prtlabour@gmail.com

வெள்ளிக்கிழமை, 08 ஜூன் 2018 02:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது