முதற்பக்கம் பிரிவுகள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பிரிவு
பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பிரிவு

பெண்கள் இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்துவதே இப்பிரிவின் பிரதான தொழிற்பாடாக உள்ளது. இச் சூழமைவில் இப்பிரிவுக்கு பின்வரும் சட்டவாக்கங்களைஅமுல்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 • 1956 ஆண்டு 47ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டம்
 • 1939ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க தாய்மை நன்மைகள் கட்டளைச் சட்டம்
 • 1942 ஆம் ஆண்டு 45ஆம்இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம்( பெண்கள்,இளம் ஆட்கள், சிறுவர்களின் வேலைவாய்ப்புத் தொடர்புடைய ஏற்பாடுகள்)
 • 1945 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் பணியாளிகள் சட்டம் (வேலைவாய்ப்புச் மற்றும் உபகாரங்களின் ஒழுங்குவிதிகள்) (பெண்கள் இளம் ஆட்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான வேலைவாய்ப்பு ஏற்பாடுகள்)

இப்பிரிவினர் மேற்கொள்ளும் பிரதான கடமைகள் பின்வருமாறு

 • Iபெண்கள், இளம் ஆட்கள், சிறுவர்களின் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளை மீறுவது தொடர்பான பெற்றுக்கொள்ளப்பட்ட முறை்பபாடுகளை விசாரணை செய்தல்.
 • பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்புச் சம்பந்தமான விடயங்களில் பெண்தொழிலாளிகள் மற்றும் மக்கள் இடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • வேலை செய்யும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான கருத்துக் கணிப்புக்களை மேற்கொள்ளல்
 • அதிகாரிகளிக்கு பயிற்சி அளித்தல் மற்றும் கூருணர்வாக்குதல்.
 • சிறுவர் ஊழியத்தை இல்லாதொழிப்பது மீதான ILO வின் சர்வதேசம் மீதான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்
 • பெண் பணியாளர்கள் மற்றும்சிறுவர்களுடன் தொடர்புடைய கடமைகளில் கவனம் செலுத்தலும்  கூருணர்வாக்கலும்.
 • வேலைக்கமர்த்தப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது முறைசார் கல்வி மீதான சுனாமிக்கு பின்னான பதிற்செயற்பாடு மீதான கருத்திட்டத்தின் அமுல்படுத்துகை.
 • அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிள்ளைகளுக்கான தேசிய செயற்திட்டமொன்றை வெளியிடல்.
 • சிறுவர் தொழில் தொடர்பான பிரச்சினைகளை வெளிக்கொணரும் பொருட்டு பொதுசன ஊடகங்களை துடிப்பாக்கல்  .

பதவிநிலை    தொலைபேசிஇலக்கம்.

பதவி தொ.பே.இல
தொழில் ஆணையாளர் (பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள்)
+94 11 2587315
தொழில் பிரதி ஆணையாளர் +94 11 2369800
தொழில் உதவி ஆணையாளர்
+94 11 2368539
புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017 07:01 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
aaaa   Labour Department     Labour Department     Labour Department   aaa

முக்கிய தளங்கள்

உதவி தொகை

கொள்முதல் அறிவிப்புகள்


தொழிலாளர் சட்டங்கள்


EPF சலுகைகளை கோர தேதி மற்றும் நேரத்தை திட்டமிடுங்கள்


அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை


கணக்கெடுப்பு அறிக்கை - மே 2020


இரவுநேர வேலைக்கான அனுமதி


திணைக்களம் சுற்றறிக்கைகள்


 பதிவு நடைமுறைகள்


இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்


உங்கள் தொழிற் அலுவலகத்தை கண்டறியவும்