முதற்பக்கம் பிரிவுகள் ஊழிய தரப் பிரிவு
ஊழிய தரப் பிரிவு

இந்தப் பிரிவின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சட்டஏற்பாடுகள்

  1. 1941 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சம்பள சபைகள் கட்டளைச் சட்டம்.

  2. 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும்அலுவலகச் (சேவை ஒழுங்கு விதிகள் மற்றும் கொடுப்பனவுகள்) சட்டமும் அதன் திருத்தங்களும்.
  3. 2005 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, வரவு செலவு திட்ட நிவாரணப் படிச்சட்டம்

தொழில் தரப் பிரிவால் வழங்கப்படும் சேவைகள்

  1. தனியார் துறைத் தொழிலாளாகளின் ஆகக்குறைந்த சம்பளங்களையும், சேவை நிபந்தனைகளையும் தீர்மானித்தல்.
  2. சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம், கடைகள் மற்றும் அலுவலகச் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆகக் குறைந்த வேலை நேரம், மேலதிக கொடுப்பனவுகள் ஆகியவற்றை தீர்மானித்தலும், அவற்றுக்குரிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தலும்.
  3. தொழிலாளர் தொழில் கொள்வோர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமையவும், தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு அமையவும் ஒவ்வொரு தொழிலுக்குமான புதிய சம்பளச் சபையை அமைத்தல்.
  4. சம்மளத்திலிருந்தான சட்டபூர்வமான கழிவுகள் பற்றி தொழிலாளர்கள்  தொழில் கொள்வோர் ஆகியோரி்டையே விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
  5. வாழ்க்கைச் செலவுச் சுட்டியின் படி,  கொக்கோ, கறுவா தொழில்களுக்கான ஆகக்குறைந்த நாட்சம்பளத்தை கணித்தலும் அதனை மாதாந்தம் பிரசுரித்தலும்
வெள்ளிக்கிழமை, 08 ஜூன் 2018 05:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது