தொழில் திணைக்களத்தில்   உதவி தொழில் ஆணையாளர் (திணைக்களம்)- வகுப்பு III பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை– 2017 (2019)

வகுப்பு I இற்குத் தரமுயர்தத் தேவையுள்ள, பிற அலுவலக மொழித்திறமை தவிர்ந்த அனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ள  வகுப்பு ii  இல் உள்ள ​தொழில் அலுவலர்கள், 

பொது நிரவாகச் சுற்ற்றிக்கை இல. 01/2014(v)இன் பிரகாரம் பிற அலுவலக மொழியிலான திறமையைப் பெற்றுக் கொள்வதற்கு 2019.06.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியை சலுகையாகக் கொண்டுள்ளார்கள். எனவே, அக்  குறித்த காலப்பகுதியில் அலுவலக மொழித்திறமையைப் பெற்றிருப்பின் அவர்கள்  2013.03.07 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட உதவித் தொழில் ஆணையாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திட்டத்தின்படி அனைத்துப் பிற தகைமைகளையும் கொண்டுள்ளவர்கள் அத் திகதியிலிருந்து  வகுப்பு Iஇற்குத் தரமுயர்த்துவதற்கான அனைத்துத் தகைமைகளைக் கொண்டுள்ளவர்களாவார்கள்.

இதன் பிரகாரம், பிற அலுவலக மொழித்திறமையைக் கொண்டுள்ள நிலைமைகளுக்கு அமைவாக, 2019.06.30 ஆம் திகதிக்கு முன்னர் (சலுகைக் காலம் முடிவடையும் திகதி) அல்லது சொல்லப்பட்ட பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப்பரீட்சை அத் திகதிக்கு முன்னர் ஏதாவது  நடைபெற்றிருந்தால் அத்திகதிக்கு முன்னர் பிற அலுவலக மொழியில் திறமையை அடைந்திருப்பின் அவர்களுக்கான உரிய உதவித் தொழில் ஆணையாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பரீட்சைத் திணக்களத்திற்கு சிபாரிசு செய்து அனுப்பப்படும். மேலே குறிப்பிடப்பட்ட தகைமைகளை  பூர்த்தி செய்யாத யாராவது அலுவலர் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யின்  அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும்,  வகுப்பு I  இற்கு தரமுயர்த்தத் தேவையான அலுவலக மொழித் திறமை தவிர்ந்த  அனைத்துப் பிற தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள வகுப்பு ii  இல் உள்ள தொழில் அலுவலர்கள், சலுகை வழங்கப்பட்டுக் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட இணைப்பு 01 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அடங்கிய  பரீட்சை அறிவித்தல் மற்றும் 2019.02.01 ஆம் திகதிய   DL/E/1/5(4)2016ஆம் இலக்கக் கடிதத்தினதும் பிரகாரம்  உதவித் தொழில் ஆணையாளர் (திணைக்களம்) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான  சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ளார்கள்.

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019 10:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது