சர்வ தேச மகளிர் தினம் 2018

“வலிமையான பெண், முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறாள்” இதுவே இவ்வருடத்திற்கான மகளிர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

 

தொழில் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவினால்  மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் சேவை ஆற்றும் தைரியமுள்ள பெண்களைப் பாராட்டும் வகையில் “ரன்லிய சிரமபிமானி” என்ற விருது வழங்கும் வைபவமானது எதிர்வரும் 2018  மார்ச் மாதம்  08 ஆம் திகதி மு.ப. 9.00 மணிக்கு , தொழிற் செயலகத்தின்  10 ஆம் தளத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சின்கொரவ அமைச்சர் டபிள்யு. டி. ஜே. செனவிரத்ன அவர்களின்   தலைமையில் நடைபெற உள்ளது, பெருந்தோட்ட  கௌரவ ராஜாங்க அமைச்சர் லக்க்ஷ்மன் வசந்த பெரேரா மற்றும் பெருந்தோட்ட கௌரவ அமைச்சர் நவீன் திஸ்ஸா நாயகா ஆகியோரும் மற்றும் பிரபலமான அதிதிகளும் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 05:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது