சிறுவர்விவகாரப்பிரிவினால், 2017

“தாய், தந்தை, முதியோரின் அன்பு பாசப்பிணைப்பினூடாகச் சிறுவர்களை அவர்களது அதிசயம் மிக்க உலகிற்குக் கொண்டுசெல்வோம்” என்ற இவ்வருட தொனிப்பொருளின் கீழ், உலக சிறுவர் தினம் ஒக்தோபர் 1 ஆம் திகதியன்று கொண்டாப்படுகிறது. இவ்வருட வைபவம் தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சபரகமுவ அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டபிள்யு.

டி.ஜே. செனெவிரத்ன அவர்களது தலைமையிலும், தொழில், மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ரவீந்திர சமரவீர அவர்களது பங்குபற்றுதலுடனும் வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் நாள் முழுவதும் நடைபெறவிருப்பதுடன், வெலிமடை பிரதேச பாடசாலைகள் 10 இலிருந்து 50 பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். இதற்கு “சிரம வாசனா“ நிதிய உதவி பெறப்படுவதுடன் பாடசாலை உபகரணங்கள் பரிசளிக்கப்படும்.

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017 08:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது