இணைந்த  சேவையின் அலுவலக ஊழியர் சேவையின் III  ஆந் தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரல் | தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சு, தொழில் திணைக்களம்

1.0.   தொழில் திணைக்களத்தில் நிலவும் அலுவலக ஊழியர் சேவையின் III  ஆந் தரத்தின் வெற்றிடங்களுக்காக அலுவலரை ஆட்சேர்ப்பதற்காக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்படி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2.0.   கட்டமைப்பான நேர்முகப் பரீட்சையின் பெறுபேற்றின்பிரகாரம்தகுதி அடிப்படையிலும்விண்ணப்பதாரிகள் கொண்டுள்ள தகைமை அடிப்படையிலும் தற்போது காணப்படும் வெற்றிடங்களுக்கு அவர்கள்நியமனம் செய்யப்படுவார்கள்.

3.0.   தொழில் திணைக்களத்தில்உள்ளவெற்றிடங்களின் எண்ணிக்கை 8.0 ஆம் பந்தியின்மூலம் காட்டப்பட்டுள்ளது. நியமனம் செய்யப்படும் எண்ணிக்கை மற்றும் நியமனம் நடைமுறைக்கு வரும் திகதி என்பன நியமன அதிகாரியால் தீர்மானிக்கப்படும். யாதேனும் வெற்றிட எண்ணிக்கைகளையோ அல்லது சகல வெற்றிடங்களையோ நிரப்பாமல் விடுவதற்கு நியமன அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

4.0.   சம்பளம் : இலக்கம் 03/2016மற்றும் 25-02-2016ஆந் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின்படி அலுவலக ஊழியர் சேவையின் III, II மற்றும் Iஆகிய தரங்களுக்கு உரிய மாதாந்த சம்பள அளவான(P.L -1-2016)ரூபா.24,250/= - 10 X 250/= - 10 X 270/= - 10 X 300/= - 12 X 330/= ரூபா. 36,410/= ஆகும். வகுப்பு II, வகுப்பு I, விசேட வகுப்பு ஆகியவற்றுக்குச் செல்வதற்கு முறையே ரூ. 27,020/=, ரூ. 29,750/=, ரூ. 32,780/= ஆகிய சம்பளங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

5.0.   இந்தப் பதவிக்குரிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக கொள்கைரீதியான எதிர்காலத் தீர்மானமொன்றிற்கு நியமிக்கப்படுவோர் உட்பட வேண்டியிருக்கும்.

6.0.   இந்தப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டால், மூன்று வருட காலத்திற்கு கட்டாயமாக தொழில் திணைக்களத்தில் சேவையாற்ற வேண்டும்.

7.0.   தகைமைகள் :-  அலுவலக ஊழியர் சேவையின் IIIஆம் தரத்தின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பதற்காக பின்வரும் தகைமைகள் உரித்தாகும்.

 

).இலங்கைக்குடிமகனாகஇருத்தல்வேண்டும்.

. விண்ணப்பம்ஏற்றுக்கொள்ளும்இறுதித்தினத்தன்று18 வயதுக்குக்குறையாமலும்   45 வயதுக்குமேற்படாமலும்இருத்தல் வேண்டும். ஏற்கனவே அரசசேவையில்நிரந்தர மற்றும் ஓய்வூதியத்துடன் கூடிய நியமனத்தைப் பெற்றுள்ளோருக்கு வயதின் மேலெல்லை பொருந்தாது.

). சிறந்தஒழுக்கமும்நல்லஆரோக்கியமும்கொண்டிருத்தல்வேண்டும்.

). கல்வித்தகைமைகள்

கல்விப்பொதுத் தராதரப்பத்திர (சாதாரணதர)பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாமல் இரு திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

உ.  அரசாங்கசேவை ஆணைக்குழுவின்  விதிகளின்  V ஆம் அத்தியாயத்தின்படி அரசாங்க சேவையில் நியமனம் பெறுவதற்குத் தகைமை அற்றவராயிருத்தல் கூடாது.

சகல விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய சகல தகைமைகளையும் 2017-09-08ஆந் திகதியன்றோ அன்றி அதற்கு முன்போ பூர்த்தி செய்திருப்பது கட்டாயமாகும்.

8.0.   விண்ணப்பம் கோரல்

பின்வரும் அட்டவணையில் கூறப்பட்டுள்ளதன்படி அலுவலக ஊழியர் சேவையில் உள்ள பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அமைச்சு

திணைக்களம்

பிரதேச அலுவலகங்கள்

பதவி

வெற்றிடங்களின் எண்ணிக்கை

1.   தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சு

தொழில் திணைக்களம்

தலைமை அலுவலகம் – மேற்குப் பிராந்தியம்- 01

அலுவலகச் சிற்றூழியர்

1

2.

 

மாவட்டத் தொழில் அலுவலகம் - மாத்தளை

அலுவலகச் சிற்றூழியர்

1

3.

 

பிராந்திய தொழி்ல் அலுவலகம் - வடமத்தி

அலுவலகச் சிற்றூழியர்

1

4.

 

மாவட்டத் தொழில் அலுவலகம்- ஹற்றன்

அலுவலகச் சிற்றூழியர்

1

5.

 

மாவட்டத் தொழில் அலுவலகம் - காலி

அலுவலகச் சிற்றூழியர்

1

6.

 

உப தொழில் அலுவலகம் - அம்பலாங்கொடை

அலுவலகச் சிற்றூழியர்

1

7.

 

உப தொழில் அலுவலகம் - முல்லைத்தீவு

அலுவலகச் சிற்றூழியர்

1

8.

 

உப தொழில் அலுவலகம் - கிளிநொச்சி

அலுவலகச் சிற்றூழியர்

1

9.

 

உப தொழில் அலுவலகம் - கல்முனை

அலுவலகச் சிற்றூழியர்

1

10.

 

தலைமை அலுவலகம் - அபிவிருத்திப்பிரிவு

அலுவலகச் சிற்றூழியர்

1

11.

 

மாவட்ட தொழிற்சாலைப் பரிசோதனைப் பொறியியலாளலாளர் அலுவலகம் - பதுளை

அலுவலகச் சிற்றூழியர்

1

12.

 

மாவட்டத் தொழில் அலுவலகம் - அவிசாவளை

அலுவலகச் சிற்றூழியர்

1

13.

 

பிராந்திய அலுவலகம் - கிழக்கு

அலுவலகச் சிற்றூழியர்

1

9.0.   கட்டமைப்பின் படியான நேர்முகப்பரீட்சை

இணைந்த சேவைகள் பணிப்பாளரின் அனுமதியின்படி விண்ணப்பதாரிகளின் அடிப்டைத் தகைமைகளைப் பரிசீலிக்கும் தினத்திலேயே நடத்தப்படும் கட்டமைப்பின் படியான நேர்முகப் பரீட்சையில் விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அளவின் அடிப்படையை முற்றாகவே கடைப்பிடித்து தகைமைகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரிகள் அலுவலக ஊழியர் சேவையின்IIIதரத்திற்கு நியமனம் செய்யப்படுவர். விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் ஊடக மொழியைத் தெளிவாக விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடவேண்டும். கட்டமைப்பின் படியான நேர்முகப் பரீட்சை அந்த மொழியிலேயே இடம்பெறும்.

கட்டமைப்பான நேர்முகப் பரீட்சையில் புள்ளி வழங்கப்படும் முறமை கீழ்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

தகைமைகள்

புள்ளிகள்

பதவியால் பெற்றுள்ள அனுபவம்(சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்)

(வருடத்திற்கு 2 புள்ளிகள் வீதம் அதிகூடிய 5 வருடங்களுக்காக கவனிக்கப்படும்)

10

தொடர்பாடல் தகைமை

5

கல்வித் தகைமைகள்

.பொ.உயர்தரம் சித்தியடைந்துள்ளமை

5

.பொ.த சா/தரப் பரீட்சையில்

கணிதம், ஆங்கில மொழி, இரண்டாம் மொழி மற்றும் அரசகரும மொழிக்காகத் திறமைச் சித்தி பெற்றிருத்தல். (பாடமொன்றிற்கு 2 புள்ளிகள் வீதம் அதிக அளவில் 5 பாடங்கள் கவனத்தில் கொள்ளப்படும்).

10

தோற்றம்

5

வெளிச் செயற்பாடுகள் (விளையாட்டு/ சமூகசேவை போன்றவை)

5

நேர்முகப் பரீட்சையில் காட்டும் திறமை

10

மொத்தப்புள்ளிகள்

50

குறிப்புபதவிக்குப் பெற்றுள்ள அனுபவம், கல்வித் தகைமைகள் மற்றும் வெளிச் செயற்பாடுகள் தொடர்பில் உரிய சான்றிதழ்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். அச்சான்றிதழ்கள் விண்ணப்பம் கோரும் இறுதி நாளில் செல்லுபடியானதாதல் வேண்டும்.

10.0.    விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யும்போது மிகவும் கவனமாகவும், பிழையின்றியும் விபரங்களை வழங்கவேண்டும்.தகைமைகளைப்பரிசீலிக்கும்போது விண்ணப்பதாரி எவராவது தகையற்றவரென்பது தெரியவந்தால் எச்சந்தர்ப்பத்திலும் அவரின்/அவளின் விண்ணப்பத்தகைமை செல்லுபடியற்றதாக்கப்படலாம். விண்ணப்பதாரியால் சமர்ப்பிக்கப்படும் விபரங்கள் எச்சந்தர்ப்பத்திலாவது பொய்யானவை என்று தெரியவரின் அவர்/அவள் அரசாங்க சேவையிலிருந்து நீக்கப்பட முடியும்.

11.0.    விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.

11.1     உரிய மாதிரிப்படிவத்தின்படி விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன்படி அல்லாத மற்றும் சரியாக நிரப்பப்படாது குறைபாடுகளுடனுள்ள விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி நிராகரிக்கப்படும். உரிய முறைப்படி விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்யாமையால் ஏற்படும் நட்டத்தை விண்ணப்பதாரிகளே ஏற்கவேண்டும்.

11.2.    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பதிவு அஞ்சலில்2017.09.08  ஆந் திகதியன்றோ அல்லது அத்தினத்திற்கு முன்போ கிடைக்கத்தக்கவாறுகொழும்பு 05, தொழில் திணைக்களம், தொழில் ஆணையாளர் அதிபதிஎன்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். விண்ணப்பப் படிவத்தை இட்டு அனுப்பும் உறையின் இடதுபக்க மேல் மூலையில் அலுவலக ஊழியர் சேவை தரம் III க்கு ஆட்சேர்த்தல்என்று குறிப்பிடவும். அத்தினத்திற்குப் பிந்திக் கிடைக்கும் எந்த விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

12.0.    இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற முன்கூட்டிய கருத்துக்கமைய உரிய தினத்திலோ அதற்கு முன்னரோ விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள சகல விண்ணப்பதாரிகளும் தொழில் ஆணையாளர் அதிபதியால் கட்டமைப்பான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். இருப்பினும் அவ்வாறு அழைக்கப்படும் விண்ணப்பதாரிகள் இப்பதவிக்கான தகைமைகளைப் பெற்றுள்ளார்கள் என்று கருத்தப்பட்ட்டதாக ஆகாது. விண்ணப்பதாரிகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கும் அறிவித்தலுக்கமைய தகைமைகள் உள்ளனவாஎன்பதை பரிசீலிக்கும் சந்தர்ப்பத்தில் தகைமை இல்லையென்பது வெளிப்படும் இடத்து அவரின் விண்ணப்பத் தகைமை நிராகரிக்கப்படும்.

13.0.    விண்ணப்பதாரிகள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகப்பின்வரும் ஆவணங்களில் ஒன்றை நேர்முகப்பரீட்சைக் குழுவிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

I.         ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட​ தேசிய அடையாளஅட்டை.

II.       செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.

14.0.    இதில் குறிப்பிடாத ஏதாவது விடயமிருப்பின் அது தொடர்பாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் அதிபதியால் தீர்மானிக்கப்படும். சகல விண்ணப்பதாரிகளும் இவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளபொது விதிகளுக்கு இணங்கச் செயற்படுவதற்குக் கட்டுப்பட்டுள்ளார்கள்.

                       

 

 

இணைந்த சேவைகள் பணிப்பாளர்அதிபதியின் கட்டளைப்படி    

ஏ. விமலவீர

தொழில் ஆணையாளர் அதிபதி

  

2017. 08.………………………… ஆம் திகதி

தொழில் திணைக்களம்

நாரஹேன்பிட்டி, கொழும்பு – 05.

மாதிரி விண்ணப்பப்படிவம்

 

Application

Note: Right click on the link and select "Save Link As..." to download the application.

 

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2017 07:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது