ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம்8 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தின வைபவம், இவ்வருடம் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவினால், “முக்காலத்தையும் அறிந்தவள் – பலத்தினால் வெற்றி கொள்வாள்” என்னும் கருப்பொருளின் கீழ் ஹபராதூவ, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மண்டபத்தில் மு.ப. 9.00 மணி தொடக்கம் பிப. 2.00 மணி வரை நடாத்தப்படும். தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ. டபிள்யு. டி.

ஜே. செனெவிரத்ன அவாகளும், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ. ரவீந்திர சமரவீர அவர்களும் இதில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்வர். கொக்கல ஏற்றுமதி அபிவிருத்தி வலயத்தைச் சேர்ந்த 400 பெண் தொழிலாளருக்கான செயலமர்வு ஒன்றும் இதில் நடாத்தப்படும்.

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017 06:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது