ஆம் ஆண்டில் இலங்கையில் சிறுவர் ஊழியத்தை முற்றாக

2016 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறுவர் ஊழியத்தை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்றிட்டத்தின் கீழ், கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை 2014 ஆம் ஆண்டினுள் பூச்சிய மட்ட சிறுவர் ஊழிய வலயங்களாக மாற்றுவதற்கு, சருவதேச தொழில் நிறுவனத்தின் அனுசரணையுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தை இவ்வாறு பிரகடனப்படுத்துவதற்குரிய ஆரம்ப வைபவம் கேகாலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்டச் செயலாளரது பங்குபற்றலுடன் 2014/06/19  ஆம் திகதியன்று நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தை சிறுவர் ஊழியமற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதற்கான ஆரம்ப வைபவம், மாவட்டச் செயலாளரின் பங்குபற்றுதலுடன் 2014/08/14  ஆம் திகதியன்று நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனுடன் சேர்த்து, இம்மாவட்டங்களின் சமூகக்குழுவினரை அறிவூட்டுவதற்கான நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்வாறான நிகழ்ச்சிகள் கேகாலை மாவட்டத்தில் 11 உம், அம்பாறை மாவட்டத்தில் 20 உம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு முழுவதும் இதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளும் பரிசோதனைகளும் இவ்விரு மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புதன்கிழமை, 30 ஜூலை 2014 07:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது