சர்வதேச சிறுவர் தினம்

”குடும்பம் உங்களைப் பாதுகாக்கும்” என்ற தொனிப்பொருளில், இரத்தினபுரி மாவட்டத்தை சிறுவர் உழைப்பு அற்ற பிரதேசமாக ஆக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்குச் சமாந்தரமாக, சர்வதேச சிறுவர் தினம் தொடர்பான வைபவம், ஒக்தோபர் 1 ஆம் தேதி மு.ப. 9.30 மணிக்கு குருவிட்ட பிரதேச சபை மைதானத்தில், தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே தலைமையில் நடைபெறும்.

அன்றைய தினம் சிறுவர் உழைப்புக்கு எதிரான பதாதைகளுடன் கூடிய ஊர்வலமொன்றும் நடாத்தப்படும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைப் பிள்ளைகள் 450 பேர் இதில் கலந்துகொள்வதுடன், அவர்களது திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியொன்றும் நடாத்தப்படும்.

இவ்வைபவத்தின் இரண்டாம் கட்டமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் சிறு கைத்தொழில், மத்தியதர கைத்தொழில், வர்த்தக மற்றும் பெருந்தோட்ட தொழில்தருநர்களுக்காக, அபாயகரமான தொழில்கள் பற்றிய அறிவூட்டும் நிகழ்வொன்றும் குருவிட்டவில் அன்றைய தினம் நடாத்தப்படும்.

அதற்கு மேலதிகமாக, 2013-09-30 ஆம் தேதியன்று களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, சிறுவர் உழைப்பை இல்லாதொழித்தல் பற்றிய அறிவூட்டல் நிகழ்வொன்றும் நடாத்தப்படும்.

திங்கட்கிழமை, 03 பெப்ரவரி 2014 09:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது