முதற்பக்கம் எமது சேவைகள்
ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர் இறந்த பின்னர் நிதியத்தைப் பெற்றுக்கொள்ளல்.

அடிப்படைத் தகைமைகளும் தேவைப்பாடுகளும்.
கீழே குறிப்பிடப்பட்ட தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரி தேவையான  சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல்.
இறந்தவர் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவரொருவராக இருத்தல்.
இறப்புச் சான்றிதழ்

சமர்ப்பிக்கும் வழிமுறை
தொழில் ஆணையாளர் ஊழியர் சேமலாப நிதிப் பிரிவூக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்கள்

விண்ணப்பப் பத்திரம்.

இறந்த அங்கத்தவரின் பின்னுரித்தாளிகள் அனைவரும் ஒரு டு விண்ணப்பப் பத்திரம் வீதம் சமர்ப்பிக்க வேண்டும்.

வரிசைக் கிரமம்

படிமுறை 01:விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பித்தல்
படிமுறை 02:அவசியமான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களை தொழில்தருநரின் குறிப்புக்கள் இடப்பட்ட பின்னர் தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திடம் ஒப்படைத்தல்.
படிமுறை 03:தொழில் திணைக்களம் விண்ணப்பப் பத்திரத்தைப் பரிசீலனை செய்தல்.
படிமுறை 04:தீர்மானக் கடிதத்தை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூக்கு அனுப்புதல்.
படிமுறை 05:நன்மைகளை விடுவித்தல்.

சேவைக்காக எடுக்கும் காலம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைத்த பின்னர் 02 மாதங்கள் செல்லும். குறைபாடு நிலவூமாயின் அதைவிட அதிக காலம் செல்லக்கூடும்.

ஆற்றுப்படுத்தும் நேரங்கள்
கிழமை நாட்களில்           - திங்கள் முதல் வெள்ளி வரை
நேரம்                   - மு.ப. 9.00 முதல் பி.ப. 04.30 வரை
விடுமுறை நாட்கள்            - அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறைத்
தினங்கள்.

சேவை தொடர்பான செலவினங்கள்
எவ்விதமான கட்டமும் அறவிடப்படமாட்டாது.

துணை ஆவணங்கள்
இறப்புச் சான்றிதழ்.
கடன் செலுத்துதல் தொடர்பான விபரங்கள்.
21 வபயதுக்கு மேற்பட்ட பிளைகளின் உரித்துக்கோரல்கள்.
விண்ணப்பதாரியின் பிள்ளைகள் விவாகமானவர்களெனில் விவாகச் சான்றிதழ்.
கிராம உத்தியோகத்தரினதும் பிரதேச செயலாளரினதும் சான்றுரை.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி    பிரிவூ    பெயர்    முகவரி    தொலைபேசி இலக்கம் பக்ஸ்
உதவித் தொழில் ஆணையாளர்கள் (நன்மைகளும் சேவைகளும்) 
   ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ   திரு. று.து.டு.ரு. விஜேவீர
   
356 காலி வீதி கொழும்பு 03
2564504 2564504

பிரதி ஆணையாளர்
  ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ
திரு. னு.மு.சு. வீரக்கோன்     
356 காலி வீதி கொழும்பு 03 2564504 2564504


விசேட தருணங்கள்
இறந்தவரது பெயர் குறித்த அறிவித்தலுக்கிணங்க அவர்களுக்கு நிதியம் உரித்தாகும்.
பெயர் குறிக்கப்பட்டவர் இல்லாதவிடத்து பொதுச் சட்டத்திற்கிணங்க பின்னுரித்தாளிகளுக்கு வழங்கப்படும்.

மாதிரித் தரவூகளுடன் விண்ணப்பப் பத்திரம்.

செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 06:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது