முதற்பக்கம் எமது சேவைகள்
விவாகம் காரணமாக சேவையில் இருந்து ஓய்வூ பெறும் போது ஊழியர் சேமலாப நிதியத்தைப் பெற்றுக்கொள்ளல்

அடிப்படைத் தகைமைகளும் தேவைப்பாடுகளும்
1.    விவாக நோக்கத்திற்காக சேவையில் இருந்து நீங்கும் பெண்கள் இதற்கான தகைமைகளைப் பெறுவர்.
2.    பின்வரும் விடயங்களின் பெரில் விண்ணப்பிக்கலாம்.
    சேவையில் இருந்து விலகி மூன்று மாதங்களுக்குள் விவாகம் செய்தல்.
    விவாகம் செய்து 5 வருடங்களுக்குள் சேவையில் இருந்து நீங்கிச் சென்றுள்ளவிடத்து.
    விண்ணப்பதாரியின் பெயர் விண்ணப்பப் பத்திரத்தின் 1 மற்றும் 11 இலக்க பக்கங்களில் சரியாக இருத்தல் வேண்டும்.
    விண்ணப்பப் பத்திரத்திலும் மத்திய வங்கியிலும் பதிவூ செய்த பெயர் சரியானதாக இருத்தல் வேண்டும்.
    தேவைப்படும் அனைத்து ஆவணங்களையூம் சமர் ப்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட விடயங்களுக்குப் புறம்பான விண்ணப்பப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.

சமர்ப்பிக்கும் முறை

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரத்தை ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதித் தொழில் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பத்திரத்துடன் அவசியமான சான்றிதழ்களையூம் ஆவணங்களையூம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரம்
“மு” விண்ணப்பப் பத்திரம்.

ஏனைய ஆவணங்கள்
தேசிய அடையாள அட்டையை புதிதாக பெறுதல் ">விவாகச் சான்றிதழ்
டீ அட்டை
தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்திய பிரதிஇ தொழில்தருநர் அல்லது நிறுவனம் மூடப்பட்டுள்ள வேளையில் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரால் மேலொப்பம் இடப்பட்டிருத்தல் வேண்டும்.
தனது வங்கி வைப்பேட்டின் பிரதி.

செயற்பாடு கட்டம் கட்டமாக
படிமுறை 1:கொழும்பு தலைமையகத்தில் இருந்தோ மாவட்ட அலுவகங்களிலிருந்தோ ‘மு’ விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல்.
படிமுறை 2:தொழில் தருநரின் சான்றுப்படுத்தலுக்காக சமர் ப்பித்தல்.
படிமுறை 3:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை கீழே காட்டப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஒப்படைத்தல்.
டீ அட்டைஇ தேசிய அடையாள அட்டையை புதிதாக பெறுதல் ">விவாகச் சான்றிதழ்தேசிய அடையாள அட்டையின் பிரதிஇ வங்கிப் பதிவேட்டின் பிரதி.
படிமுறை 4:தொழில் திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற அலுவலர் ஒருவரால் சம்பந்தப்பட்ட விண்ணப்பப் பத்திரம் பரிசீலிக்கப்படல்.
படிமுறை 5:விண்ணப்பப் பத்திரம் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூக்கு அனுப்பி வைக்கப்படல்.
படிமுறை 6:ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ பணத்தை விடுவித்தல்.

சேவைக்காக எடுக்கும் காலம்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள் ஒப்படைக்கப்பட்டு பணம் செலுத்தப்பட ஒரு மாத காலம் செல்லும். முறைப்பாடுகள் நிலவூம் விண்ணப்பப் பத்திரங்களுக்காக நீண்ட காலம் செல்லும்.

ஆற்றுப்படுத்தும் நேரங்கள்
கிழமை நாட்களில்         - திங்கள் முதல் வெள்ளி வரை
நேரம்                - மு.ப. 9.00 முதல் பி.ப. 04.30 வரை
விடுமுறை நாட்    கள்          - அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறைத் தினங்கள்

செல்லுபடியாகும் காலம்
விண்ணப்பப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து இறுதி வரை.

சேவை தொடர்பான செலவினங்கள்
கட்டணமேதும் அறவிடப்படமாட்டாது.

துணை ஆவணங்கள்
மு விண்ணப்பப் பத்திரம்
டீ அட்டை
விவாகச் சான்றிதழின் பிரதி
தொழில்தருநர் ஃ கிராம உத்தியோகத்த மற்றும் பிரதேச செயலாளரின் ஒப்பத்துடனான தேசிய அடையாள அட்டையின் பிரதி.
தனது வங்கிப் பதிவேட்டின் பிரதி.

சேவைப் பொறுப்புக்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
முகவரி   
தொலைபேசி இலக்கம் பக்ஸ் இலக்கம்
உதவித் தொழில் ஆணையாளர்கள் (நன்மை சேவைப் பிரிவூகளின்) ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ 356 காலி வீதி கொழும்பு 03 2564503
2564506
2564505
2564515
2564507
2564516
2564504
பிரதி ஆணையாளர் திரு. னு.P.மு.சு. வீரக்கோன ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ 356 காலி வீதி கொழும்பு 03 2564503
2564506
2564505
2564515
2564507
2564516
2564504

விசேட தருணங்கள்
விசேட தருணங்கள் கிடையாது.

செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 06:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது