முதற்பக்கம் எமது சேவைகள்
நிரந்தர வீசா அனுமதி பெற்று வெளிநாட்டுக்குப் புலம் பெயரும் போது நன்மைகளைப் பெற்றுக்கொள்ளல்

அடிப்படைத் தகைமைகளும் தேவைப்பாடுகளும்

1.    வேறொரு நாட்டுக்குப் புலம் பெயர்வதற்காக தொழிலில் இருந்து நீங்கும் தொழில் புரிவோருக்கு ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள தமது மீதியை மீளப்பெற முடியூம்.

2.    இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரிக்கு நிரந்தர வீசா இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
நிரந்தர வீசா சகிதம் வேறொரு நாட்டுக்கு குடியமரச் செல்வதை நிரூபிக்க முடியாவிட்டால் நன்மைகள் செலுத்தப்படமாட்டாது.

சமர்ப்பிக்கும் வழிமுறைகள்   

விண்ணப்பப் பத்திரங்கள் அனைத்தும் தொழில் ஆணையாளர் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூக்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

குறிப்பு:
விண்ணப்பப் பத்திரத்துடன் அவசியமான ஆவணங்கள் தொழில் திணைக்களத்தின் தலைமையகத்திற்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரம்

மு விண்ணப்பப் பத்திரம்.

செயற்பாடு கட்டம் கட்டமாக


படிமுறை 01:விண்ணப்பாதாரி ஊழியர் சேமலாப நிதிய அலுவலகம்இ கொழும்பு அல்லது மாவட்ட அலுவலகத்திமிருந்து மு விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்.

படிமுறை 02:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தின் கீழே குறிப்பிட்ட பகுதியை தொழில் தருநரது நற்சாட்சிக்காக சமர்ப்பித்தல்.

(மு விண்ணப்பப் பத்திரத்தின் பகுதி ஐஐ)
படிமுறை 03:அவசியமான ஆவணங்களுடன் விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பித்தல்.

படிமுறை 04:விண்ணப்பப் பத்திரத்தைப் பரிசீலனை செய்தல்.

படிமுறை 05:இலங்கை மத்திய வங்கிக்கு தீர்மானக் கடிதத்தை அனுப்பி வைத்தல்
படிமுறை 06:காசோலையை விநியோகித்தல்.

சேவைக்காக எடுக்கும் காலம்

செயற்பாட்டுக்கு அவசியமாகும் காலம்
பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை தேவையான ஆவணங்களுடன் நேரடியாகக் கொண்டு வந்து சமர்ப்பித்தால் இரண்டு வாரங்களுக்குள் கொடுப்பனவூ செலுத்தப்படும்.

ஆற்றுப்படுத்தும்நேரங்கள்

கிழமை நாட்களில்         - திங்கள் முதல் வெள்ளி வரை
நேரம்                - மு.ப. 9.00 முதல் பி.ப. 04.00 வரை
விடுமுறை நாட்    கள்          - அரசாங்க மற்றும் வர்த்தக விடுமுறைத் தினங்கள்

செல்லுபடியாகும் காலம்:


விண்ணப்பதாரிக்கு நன்மை தொடர்பான காசோலை விநியோகிக்கப்பட்டதும் செல்லுபடியாகும் காலம் நிறைவடையூம்.

சேவை தொடர்பான செலிவினங்கள்

பணம்
விண்ணப்பப் பத்திரத்திரத்திற்காக பணம் அறவிடப்படமாட்டாது.

கட்டணம்
இதன் பொருட்டு எவ்விதமான கட்டணமும் அறிவிடப்படமாட்டாது.

அபராதம் செலுத்துதல்
அறவிடப்படமாட்டாது.

மேலதிக கட்டணங்கள்
ஊழியர் சேமலாப நிதியம் செலுத்துதல் தொடர்பில் வேறு அறவீடுகள் கிடையாது.

துணை ஆவணங்கள்
நிரந்தர வீசா அனுமதிப் பத்திரமும் அதன் பிரதியூம்.
கடவூச் சீட்டும் அதன் பிரதியூம்
விண்ணப்பப் பத்திரம்
ஊழியர் சேமலாப நிதிய டீ அட்டை (அங்கத்துவ அட்டை)

சேவைப் பொறுப்புக்கள்

பதவி    பெயர்   பிரிவூ    முகவரி    தொலைபேசி இலக்கம்
உதவித் தொழில் ஆணையாளர்கள் (நன்மைச் சேவைகள்)        ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ 356 காலி வீதி கொழும்பு 03 2564504
பிரதி ஆணையாளர்    
திரு. னு.ரி.மு.சு. வீரக்கோன்    
ஊழியர் சேமலாப நிதியப் பிரிவூ 3356 காலி வீதி கொழும்பு 03. 2564504


விசேட தருணங்கள்

நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் இந்நிலைமை ஏற்புடையதாகும்.

விண்ணப்பதாரிவீடமைப்புக் கடனுக்காக விண்ணப்பித்துள்ள வேளையில்.

விண்ணப்பதாரியின் காணியை அடகு வைத்து வீடமைப்புக் கடனுக்காக விண்ணப்பித்துள்ளவிடத்து கடன் 14 விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து மு படிவத்துடன் மாவட்ட உதவி ஆணையாளரூடாக சம்பந்தப்பட்ட கணக்கு பேணப்படுகின்ற வங்கியிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பதாரிக்கு வங்கியால் மேலதிக பணம் செலுத்த வேண்டி நேரிட்டால் வங்கி முகாமையாளர் எதிர்வரும் 3 மாதங்களுக்காக மீண்டும் கணிப்பீடு செய்து கடன் 14 விண்ணப்பப் பத்திரம் விநியோகிக்கப்படும்.

விண்ணப்பதாரி வீடமைப்புக் கடனைக் கோரியூள்ள போதிலும் அதனைப் பெற்றிருக்காவிட்டால் விண்ணப்பதாரி மாவட்ட உதவி ஆணையாளரிடமோ சிரேட்ட தொழில் உத்தியோகத்தரிடமோ கோரிக்கை விடுக்குமிடத்து அவருக்கு கடன் நம்.2 சான்றிதழ் விநியோகிக்கப்படும். விண்ணப்பதாரிக்கு வீடமைப்புக் கடன் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவே இது விநியோகிக்கப்படுகின்றது.

விண்ணப்பதாரி பணிபுரியூம் நிறுவனங்கள்

நன்மைகளைப் பெற்றுக்கொள்ள சகல சந்தர்ப்பங்களுக்கும் இந்நிலைமை ஏற்புடையதாகும்.

அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டால் அதுபற்றி மாவட்ட தொழில் அலுவலகத்திடம் அத்தாட்சிப்படுத்திக் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரி தொழில் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொண்ட அடையாளம் காண்பதற்கான (தனிநபர் விபரப் பத்திரம்) படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தரின் உதவியூடனும் பிரதேச செயலாளரது கையொப்பத்துடனும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரியின் பெயரில் மாற்றமேதுமிருப்பின் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தரிடமிருந்து அடையாளம் காண்பதற்கான சான்றிதழ் (இழப்பீட்டு எதிரிடு) கடிதத்தைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். (இரண்டு பெயர்களாலும் குறிக்கப்படுபவர் ஒரே ஆள் என்பதை உறுதிப்படுத்தல்.)

மாதிரித் தரவூகளுடனான மாதிரிவிண்ணப்பப் பத்திரம்.

செவ்வாய்க்கிழமை, 06 மார்ச் 2018 06:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது